தன் வீட்டுக்கு கூலிப்படை அனுப்பிய நபர் ; சொத்துக்காக மனைவி கொலை செய்த ஊதாரி கணவன் !

Photo of author

By Parthipan K

தன் வீட்டுக்கு கூலிப்படை அனுப்பிய நபர் ; சொத்துக்காக மனைவி கொலை செய்த ஊதாரி கணவன் !

மதுரை அருகே சொத்தைத் தன் பேரில் மாற்றிக் கொடுக்க மறுத்த மனைவியைக் கூலிப்படை அனுப்பி கொலை செய்திருக்கிறார் கொடூர கணவர் ஒருவர்.

மதுரையில் பாத்திரக்கடை வைத்திருப்பவர் குமரகுரு. இவர் தன் மனைவி லாவண்யாவோடு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பாரதி உலா வீதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் லாவண்யாவை சிலர் இரண்டு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டினர். இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இது  சம்மந்தமாக குமரகுரு அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். லாவண்யாவின் வீடருகே இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தபோது அவை செயல் படாமல் இருந்தது சந்தேகத்தை கிளப்பியது. மேலும் நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே செல்லாமல் எளிதாகக் கதவை திறந்து சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் வீட்டுக்குள் இருந்து யாராவது கதவைத் திறந்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் லாவண்யாவின் கணவர் குமரகுரு மேல் சந்தேகம் கிளம்பியது.

இதையடுத்து உடனடியாக அவரைக் கைது செய்து விசாரணை செய்ய, மனைவியைக்  கூலிப்படை அனுப்பி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். ஆனால் அந்த கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குமரகுரு பாத்திரக் கடை வைத்திருந்தாலும் அதில் வரும் வருமானத்தை ஆடம்பர செலவுகள் செய்து மேலும் சொத்துகளை விற்றும் ஜாலியாக உலாவந்துள்ளார். இதனால் அவரது தந்தை பாதி சொத்தை தனது மருமகள் லாவன்யா பேரில் எழுதி வைத்துள்ளார். இது குமரகுருவுக்குக் கோபத்தை ஏற்படுத்த, லாவண்யாவிடம் சொத்துகளைத் தன் பேரில் மாற்றி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் லாவண்யா மறுக்கவே தனது நண்பர் ஒருவர் மூலமாக கூலிப்படையை ஏவி லாவண்யாவைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.