மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

Photo of author

By Jayachandiran

காதல் மனைவி இறந்து போனதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகேயுள்ள நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜன். 26 வயதான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார். கடந்த 15 ஆம் தேதி பவித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் மனைவியின் இறப்பை நினைத்து அரவிந்தராஜன் கடும் வேதனையில் இருந்துள்ளார். நேற்று காலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரவிந்தராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் பொது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரவிந்தராஜன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது முகநூலில், பவித்ரா இறந்துவிட்டாள், அவள் முகத்தை பார்க்க கூட அனுமதிக்கவில்லை.

அவள் இல்லாமல் என்னால் வாழமுடியாது, நானும் அவள் இருக்குமிடத்திற்கு தேடிப் போகிறேன். என் சாவுக்கு பவித்ராவின் அம்மாவும், அவரது மாமாவும்தான் காரணம் என்று பதிவு செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.