கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி!

Photo of author

By Hasini

கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி!

குஜராத் மாநிலத்தில், தஹோத் மாவட்ட தன்பூர் ஊராட்சியில் உள்ள காஜூரி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் உள்ளிட்ட ஊர் மக்களை சேர்ந்த சில ஆண்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். பெண்கள் குழந்தைகள் அனைவரும் சூழ்ந்திருக்க இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம்  கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.

இந்த சம்பவம் வீடியோவாக இணையதளங்களில் வைரலாக வந்த நிலையில் அந்த வீடியோவில் அங்கிருந்த பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடைகள் வழங்கி உதவ முன்வரும் போது அந்தப் பெண்ணின் கணவன் அவர்களை தடுத்து விட்டார். இந்த வீடியோவின் அடிப்படையில்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவனையும் அவருடன் கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணும், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபரும் இணைந்து வாழ முடிவு செய்து கிராமத்தை விட்டு வெளியே செல்ல முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட கணவன் அதன் காரணமாக கிராமத்தைச் சேர்ந்த 18 இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அந்த இருவரையும் மடக்கிப் பிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தான்.

அதன்பின் அந்தப் பெண்ணை கண்டிக்கும் விதமாக அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்க செய்துள்ளான். பெண்ணை அவமானப்படுத்தியது, அவரை தாக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்தப் பெண்ணின் கணவன் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குஜராத்தில் வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு ஓடிப்போக இருந்த மனைவியை ஊரார் முன் நிர்வாணமாக்கி தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது போன்ற பழங்குடியின மக்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தாலும், தற்போது இந்த மாதிரி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீப காலமாக பல கொடுமை செய்யும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது.