வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்!

0
179
Husband who went abroad! What a pity the wife's act of having a baby girl!
Husband who went abroad! What a pity the wife's act of having a baby girl!

வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்!

கயத்தாறு அருகே மனைவி குடும்பம் நடத்த வராததன் காரணமாக மனமுடைந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கயத்தாறு அருகே திருமணங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கஞங்கிணறு என்ற கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டியன்.

இவரது மகன் பாண்டியராஜன். 33 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டையைச் சேர்ந்த வள்ளிவேல் என்பவரின் மகள் வசந்தா என்ற 30 வயது பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே பாண்டியராஜன் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். அதனைத் தொடர்ந்து அந்த பெண் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்பினார்.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஊருக்குத் திரும்பிய பாண்டியராஜன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் அதன் காரணமாகவும், அவர் வராததன் காரணமாகவும் பாண்டியராஜன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்தில் மது குடித்த அவர், அதில் விஷம் கலந்து குடித்து மயங்கி விட்டார். இதைப் பார்த்து அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டியராஜன் நேற்று அதிகாலையில் பரிதாபமாக சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleமுதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!
Next articleமித்தாலி ராஜ், நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேருக்கு கேல் ரத்னா விருது பரிந்துரை.!!