முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

0
110

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த பின் அதில் பலவற்றை நிறைவேற்றிவிட்டார். ஒவ்வொரு நாளும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் அவர் நிறைவேற்றிய திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு இலவச பயணம். அந்த வகையில் தற்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என அனைவருக்கும் இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கின்றது.

முன்பெல்லாம் காற்று வாங்கும் அரசு பேருந்துகளில் இப்போது கூட்டம் நிறைந்து உள்ளது. அதேபோல் தனியார் பேருந்துகளை பார்த்து பார்த்து ஏறும் இளவயசு பிள்ளைகளும் அப்போது அரசு பேருந்துகளில் பயணம் செய்ய முன்வந்துள்ளனர். ஏனெனில் தற்போதுள்ள காலகட்டத்தில் ஐந்தோ, பத்தோ சேர்த்து வைத்தால் நாளை நமக்கு பயனாக இருக்கும் என்பதால் இந்த சலுகையை பயன்படுத்தி அனைத்து பெண்களும் முடிந்தவரை அரசு பேருந்திலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர்.

ஆனால் சில குறிப்பிட்ட இடங்களுக்கு குறைவான அளவிலேயே பேருந்துகள் உள்ளன. மாநகர பகுதிகளில் அதிக அளவு பேருந்துகள் உள்ளன. ஆனால்  கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் குறைந்த அளவே பேருந்துகள் உள்ளதன் காரணமாக பெண்கள் ஒருத்தருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு ஏறுகின்றனர்.

நாம் பொதுவாக கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தாலே கூடாது என்று கூறுகிறோம். ஏனென்றால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படும் பட்சத்தில், அந்த இழப்பு ஈடுகட்ட முடியாததாக இருக்கும் என்பதன் காரணமாகதான். தற்போது இந்த இலவச பேருந்து பயணத்தினாலும், அரசு பேருந்துகளின் குறைவான எண்ணிக்கையாலும்  பெண்களும் அவ்வாறு படிகளில் நின்று பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தனியார் பேருந்தில் சென்றால் பயணத்திற்கு பணம் தர வேண்டும். அரசு பேருந்துக்கு இலவசம் தானே என்று முட்டி மோதிக்கொண்டு ஏறி செல்கின்றனர். அவ்வாறு மதுரையில் பேருந்து நிலையத்தில்  படிகளிலேயே பயணம் செய்த பெண்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காளவாசல் பகுதிக்கு சென்ற மாநகர பேருந்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டுகளில் ஏறி நின்றவாறு பயணம் செய்துள்ளனர். அதில் வயது முதிர்ந்த பெண்களும் இந்த மாதிரியான ஆபத்தான பயணங்களை மேற்கொண்டனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர்கள் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த வீடியோக்களை காணும் மக்கள் தங்களது  கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது பார்ப்போர் மனதை பதற வைப்பதாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது.