22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை!

Photo of author

By Hasini

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை!

Hasini

Husband who went to study at the age of 22! The cruelty done to the daughter-in-law by her own father-in-law!

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகள் வெளியில் தான் அதிகம் நடக்கிறது, என்றால் வீட்டில் உள்ளவர்களாலும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மிரட்டப்படுகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் மியானா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் செய்துள்ளார்.

தனது கணவன் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், கணவன் பள்ளிக்குச் செல்லும்போது, மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண் புகார் தரும் போது, கணவர் பள்ளிக்குச் சென்றபோது, தன்னை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த கணவனுடன் உடன் வந்து இருந்தார். ராஜஸ்தானை சேர்ந்த அந்த இருபத்தி ஒரு வயது பெண் குணாவை சேர்ந்த 22 வாலிபரை சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது கணவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த நேரத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும், அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தனது மாமனார் பல சட்ட விரோத ஆயுதங்களை கைவசம் வைத்துள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களையும், அவர் இதேபோல் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்துவதாகவும், அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்தில் பல பெண்களையும் மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் அவர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.