கணவர்களே உஷார்! மனைவியை அடித்தால் 10 ஆண்டுகள்  சிறை!

Photo of author

By Parthipan K

கணவர்களே உஷார்! மனைவியை அடித்தால் 10 ஆண்டுகள்  சிறை!

Parthipan K

Updated on:

Husbands beware! 10 years in prison if you beat your wife!

கணவர்களே உஷார்! மனைவியை அடித்தால் 10 ஆண்டுகள்  சிறை!

தானே மாவட்டத்தை சேர்ந்தவர் வன்ய ஜெகன் கொர்டி. இவருடைய மனைவி லட்சுமிபாய். இவர்கள் இருவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. ஜெகன் வேலை எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் கடந்த 2013 செப்டம்பர் 22 ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது அந்த சண்டையில் மனைவி லட்சுமிபாய் இனி நான் உங்களுக்கு சமைக்க மாட்டேன் என கூறினார். அதனால் ஆத்திரம் அடைந்த கணவர் ஜெகன் அருகில் இருந்த கட்டையினால் மனைவி தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

அந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் தன்னை தாக்கியதாக கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கணவர் ஜெகன் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அந்த வழக்கு தானே மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் மனைவியை கடுமையாக தாக்கிய வழக்கில் ஜெகன் குற்றவாளி என அறிவித்தது. அதனை தொடர்ந்து குற்றம் நிரூபிக்கபட்டது. அதனால் ஜெகனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி அவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பினை தொடர்ந்து ஜெகன் சிறையில் அடைத்தனர், குடும்ப தகாரரில் பத்து ஆண்டு சிறை தண்டனையா  என பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.