பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி!

Photo of author

By Hasini

பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி!

பொது மக்களின் மனம் என் இவ்வளவு வக்கிரம் பிடித்து உள்ளது. எடுத்ததுக்கெல்லாம் கோவப்பட்டால் நிம்மதியாக வாழ முடியுமா? ஒருவருக்கொருவர் நிம்மதி இழந்து சண்டையிட்டு வாழ்வதன் மூலம் யாருக்கு என்ன லாபம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தால் நன்மை தான்.

45 வயதான முர்லி என்ற நபர், உ.பி.யின் ஷாம்லியில், கோகவன் ஜலல்பூரில், வசித்து வருகிறார். இவருக்கு சுதேஷு என்ற மனைவியும், 20 வயதான ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் முர்லி, இரவு உணவு சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளுக்கு வந்த போது அந்த மனைவி அவருக்கு ரொட்டி சுட்டு கொண்டு வந்து சாப்பிட கொடுத்துள்ளார். அதற்க்கு அந்த கணவன் தனக்கு ரொட்டி வேண்டாம் என்றும் வெஜிடபிள் சாலட் தான் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மனைவி தனக்கு வேறு வேலையிருப்பதாக கூறிவிட்டு போய் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கணவன் தனது வீட்டிலிருந்த மண் வெட்டியை எடுத்து அவரது மனைவியை துண்டாக வெட்டியுள்ளார்.

அப்போது அவரின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடித்து கொண்டிருந்த நிலையில் அவரது 20 வயதான மகன் தனது தாயை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், தனது தாயை ஏன் இப்படி செய்தாய் என்று கூறி அவரது தந்தையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தந்தை, அந்த மண் வெட்டியால் அவரின் மகனையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அந்த பெண் மற்றும் அவரது மகனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், இவர்களின் வீட்டிற்க்கு ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவியையும் அவரின் மகனையும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரின் மகனுக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து,  மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் முர்லியை தேடி வருகின்றனர்.