தென்னிந்திய சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜய் சினிமாவை தவிர்த்து அரசியலில் நுழைந்துள்ளதே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய்யை தொடர்ந்து அவரின் தீவிர ரசிகரும், நடிகருமான விஷால் தானும் புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.
நடிகர் விஷால் உதவி இயக்குனராக அறிமுகமாகி பின் செல்லமே என்ற படம் மூலம் ஹீரோவாக அவரின் திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த விஷால் வெகு விரைவிலேயே ஆக்ஷன் ஹீரோ இமேஜை பெற்றார்.
இதற்கிடையில், நடிகர் சங்க தேர்தல் போன்ற பிற பணிகளிலும் ஆர்வம் செலுத்தி வந்த விஷாலுக்கு அரசியலில் ஆரம்பம் முதலே ஆர்வம் இருந்து வந்தது. ஆனால், அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது புதிதாக துப்பறிவாளன் படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் விஷால் அரசியல் எண்ட்ரி கொடுத்து அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் எனது பெயர் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால் தான் அரசியலுக்கு வருகிறேன்” என கூறியுள்ளார்.