‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

Photo of author

By Kowsalya

மதுரை விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்று கையில் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளைஞரின் கைப்பையில் 4 ஏர்கன் மற்றும் 4 அலைபேசிகள் இருந்துள்ளன.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை கொண்ட அதிகாரிகளிடம், நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்றும், டெல்லிக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் வருகிறது என்றும், தனக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்க விமான நிலைய பாதுகாவலர்கள் பெருங்குடி காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் வெங்கடசமுதிரம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞன் அஸ்வத்தாமன் இவருக்கு வயது 21.மேலும் கல்லூரி படிக்கும் பொழுதே என்.சி.சி – யில் இருந்துள்ளார். மேலும் அவர் இப்பொழுது மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டதால் மதுரை விமான நிலையத்திற்கு வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கிகளை மற்றும் அலைபேசிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.