அவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்! முக்கிய நபரை சாடிய ராகுல் காந்தி!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள் முன்னரே அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளின் தலைமை மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

அதேசமயம் தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி, ஆகிய கட்சிகளும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வாங்க ஒரு கை பார்ப்போம், என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். பிரச்சாரம் செய்வதற்காக கோயம்புத்தூர் ஏர்போர்ட்க்கு வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் தமிழ்நாட்டில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, போன்ற இடங்களில் மூன்று நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனை அடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தில் கே. எஸ்.அழகிரி உடன் சேர்ந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து உரையாற்றிய ராகுல் காந்தி தமிழ்நாட்டில் எனக்கு மிக சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு வருவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் நாட்டின் மக்களை இரண்டாம் நிலை குடிமக்கள் என்றுதான் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார் ராகுல் காந்தி.

இந்திய நாட்டில் ஆகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவருடைய ஒரு சில நண்பர்களுக்காக மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு தொலைதொடர்பு சாதனங்கள் போன்றவற்றையும் மோடி அவர்களுக்கு வழங்கி இருக்கின்றார். ஏழை எளிய மக்கள் பணத்திற்காக திண்டாடும் நிலையில், அந்த ஒரு சில நபர்களுக்கு மட்டும் பணம் சொந்தமாக இருக்கின்றது என்று தெரிவித்தார் ராகுல் காந்தி.

விவசாயிகளுக்கு சொந்தமான ஒரு சில முக்கிய விஷயங்களை மத்திய அரசு கொண்டுவந்த இருக்கின்ற அந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தன்வசம் ஆக்கிக் கொண்டது. இந்திய நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களுக்கு விவசாயிகள் ஆகிய நீங்கள் தொழிலாளர்களாக இருக்கிறீர்கள். ஆகவேதான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமெல்லாம் இங்கே போராடிக் கொண்டிருக்கிறோம் என தன்னுடைய பிரச்சாரத்தின்போது தெரிவித்து இருக்கிறார் ராகுல் காந்தி.