நான் தான் ஜெ-வின் அண்ணன்.. நான் உயிருடன் இருப்பதையே மறைத்த பாவிகள் இவர்கள் தான்!! அதிமுக வில் நிகழும் அடுத்த டுவிஸ்ட்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு பல பேர் அவருடைய மகள் மகன் எனக் கூறிக்கொண்டு அவரது சொத்துக்கள் மற்றும் உடமைகளில் பங்கு கேட்டு வந்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா அவர்களின் சகோதரன் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மகன் தான் வாரிசு என்று கூறி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பல மாநிலங்களில் இருந்தும் நான் தான் மகன், மகள் என்று கூறிக்கொண்டு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வந்தனர். சமீபகாலமாக அவ்வாறான பிரச்சனைகள் வராது இருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் ஒருவர் நான் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் என கூறிக்கொண்டு சொத்தில் பங்கு கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் ஜெயலலிதா அவர்களின் தந்தையான ஜெயராமனின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் என்றும், இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் தன்னுடைய சகோதரர் சகோதரி என்பதால், நான் தான் அவர்களின் மூத்த சகோதரன் எனவே சொத்தில் 50 சதவீதம் பங்கு வேண்டும் என கேட்டுள்ளார்.
அதேபோல ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களுக்கு வாரிசாக ஜெயக்குமாரின் மகள் மற்றும் மகன் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை ரத்து செய்யும்படியும் கூறியுள்ளார்.ஜெயக்குமார் அவர்களின் மகள் மற்றும் மகன் இருவரும் நான் உயிருடன் இருப்பதையே மறைத்து வழக்கு தொடுத்துள்ளனர் என குற்றம் சாட்டியும் உள்ளார். இவ்வாறு மனு அளித்ததற்கு பதில் அளிக்கும்படி ஜெயக்குமார் அவர்களின் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த விசாரணையை பிப்ரவரி மாதம் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.