யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு !!

Photo of author

By Sakthi

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு
பிரபல தொழிலதிபர் ரத்தன் டேட்டா அவர்கள் நான் யாருக்கும் எந்தவொரு பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை அளிக்கவில்லை என்று தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 49 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதை அடுத்து ரத்தன் டேட்டா அவர்கள் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் அவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் முழுவதிலும் தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து இந்த தகவல்களுக்கு பதில் அளித்து தொழிலதிபர் ரத்தன் டேட்டா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் தொழிலதிபர் ரத்தன் டேட்டா அவர்கள் “எந்தவொரு கிரிக்கெட் உறுப்பினருக்கும் அபராதம் அல்லது சன்மானம் தொடர்பாக நான் ஐசிசி அல்லது எந்த கிரிக்கெட் ஆசிரியர்களுக்கும் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனக்கு கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் இதுபோன்ற இயல்புடைய வீடியோக்கள் எனது அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து வரும் வரை நம்ப வேண்டாம்” என்று பதிவு செய்துள்ளார்.