மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்!!

0
37
#image_title
மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்
மும்பை மாநகரில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இயங்கி வந்த டாக்சி சேவைகள் இனிமேல் இயங்காது என்று அறிவிப்புகள் வெளியானதை அடுத்து டாக்சி ஓட்டுநர்கள் அந்த டேக்சிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.
டெல்லி நகரத்தை போலவே மும்பைக்கு மிகப்பெரிய தலைவலியாக காற்று மாசுபாடு உருவாகி இருக்கின்றது. இந்த காற்று மாசுபாடு குறைக்கும் முயற்சியில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி எடுத்து வருகின்றது.
அந்த வகையில் மும்பையில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த டபுள் டெக்கர் பேருந்து சேவையை நிறுத்துவதாக மும்பை மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து டபுள் டெக்கர் பேருந்து சேவை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. டபுள் டெக்கர் பேருந்துகளை போலவே  தற்பொழுது மும்பையில் மற்றொரு வாகனத்தின் சேவையை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மும்பை நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக பிரீமியர் பத்மினி டேக்சி சேவை பால ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. அதாவது மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் கொண்ட இந்த டேக்சி சேவையை  மக்களின் மிகுந்த அளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட  பத்மினி பிரீமியம் டேக்சி சேவை அக்டோபர் மாதம் 29ம் தேதி 2003ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரீமியம் பத்மினி டேக்சி வாகனங்கள் தற்பொழுது 20 ஆண்டுகள் எட்டியுள்ளது. ஆனால் மும்பையில் ஒரு போக்குவரத்து விதி உள்ளது. 20 ஆண்டுகள் ஆன வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது தான் அந்த விதி. குறிப்பாக டாக்சி விஷயத்தில் இந்த விதி மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகின்றது.
இதையடுத்து மும்பையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கும் விதமாகவும், 20 ஆண்டுகள் வயதுள்ள வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்பதை கருத்தில் கண்டும் மும்பை மாநகராட்சி பிரீமியம் பத்மினி டேக்சி சேவை முறைக்கு மும்பை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்தியில் 60 ஆண்டுகால வரலாறாக இருந்த பிரீமியம் பத்மினி டேக்சிக்கு ஓட்டுநர்கள் அனைவரும் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்