நடிகை சிம்ரன் தனது ஆரம்ப கால நடிப்பு வாழ்க்கை குறித்து தனியார் youtube சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு, நீங்கள் நடிப்பில் சிறந்து விளங்க என்ன காரணம் என்று கேட்டபோது, நான் எப்பொழுதும் நடிக்கும் போது என் சொந்த சுய விருப்புகளை விட்டு வேறு ஒரு நபராக தான் நடிப்பேன். முழுக்க முழுக்க இயக்குனர் கூறிய அறிவுரையின் படி தான் செயல்படுவேன். அவர்கள் கூறும் கேரக்டரில் கூடுதலாக என் உழைப்பு போட்டு அழகான நடித்துக் காட்ட முயற்சிப்பேன். அப்பல்லாம் எப்பயாவது தான் படம் வரும். இப்போ அப்படி கிடையாது. சினிமாவுக்குள் நுழைவது அப்பொழுது மிகவும் கடினம். தற்சமயம் சினிமா துறையில் உள்ளே நுழைந்து விட்டாலும் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம். நான் இப்பொழுது அறிமுகமாக இருந்தாலும் நான் என் வேலையில் உள்ள ஈடுபாட்டினால் எனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
இடுப்பழகி என்ற சுட்டிக்காட்டும் வரும் எனக்கு ஒன்றும் அன்கன்வியன்டாக இல்லை. நான் அப்பொழுது அவ்வளவு பிட்டாக இருப்பேன் என்பதில் எனக்கு பெருமை தான். இப்போதான் ரொம்ப எடை போட்டுட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். ஒரு நல்ல ஸ்கிரிப்ட் என்பது கதை கூறும் போதே நம் கண் முன் தோன்றும். அப்படி தோன்றவில்லை என்றால் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் என்று அவருக்கு நடிப்பு மீது உள்ள ஆர்வத்தை ஸ்போட்டிவாக கூறியுள்ளார். மேலும் பள்ளிப்பருவத்தில் தான் மிகக் குறும்பாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.