எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்!
மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளும் கட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 70% தொழில் வளர்ச்சி ஆனது சென்னை மற்றும் கோவையை மையமாக வைத்து இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 30 சதவீதம் தான் இதர மாவட்டங்களை சூழ்ந்துள்ளது.
இந்த பாரபட்சமால் இதர மாவட்டங்களில் தொடர் பிரச்சனைகள் இருந்து வண்ணமாக உள்ளது இதனை தவிர்க்க தென் மாவட்டங்களுக்கு தொழில் வளர்ச்சிக்கான ஒரு ஆணையம் அமைத்து ஐஏஎஸ் மற்றும் உயரதிகாரிகளாக கமிஷனரை பணி நியமனம் செய்து மேற்கொண்டு வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நான் அமைச்சராக இருந்த பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதன் முதலில் அடிக்கல் நாட்டினேன். ஆனால் திமுக, அதிமுக தான் இதனை கொண்டு வந்துள்ளது என தவறாக என்னி தற்பொழுது வரை அதன் வளர்ச்சிக்கான எந்த ஒரு பணியையும் தொடங்கவில்லை.
ஆனால் ஆளும் கட்சிகளுக்கு மாநிலம் வாரியாக தற்பொழுது பாஜக, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியதால் ஆரம்ப கட்ட பணிகள் தற்பொழுது தான் தொடங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல உயிர்கள் இழந்து வரும் நிலையில் அந்த விளையாட்டின் உரிமையாளர்கள் 200 கோடி என்ற அளவில் ஒரு பக்கம் சம்பாதித்து தான் வருகின்றனர்.
இதனையெல்லாம் கவர்னர் வேடிக்கை பார்க்கிறாரே தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசு 162 என்ற சிறப்பு சட்டத்தின் கீழ் இது குறித்து ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம் என்று கூறினார்.
அதேபோல தமிழகத்தில் போதைப்பொருள் ஊடுருவி தலைவிரித்து ஆடும் நிலைக்கு வந்து விட்டதையடுத்து இதற்கு துணை போகும் காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் எனக் திமுக மக்களிடம் ஆசை வார்த்தை கூறி தற்பொழுது வரை ஏமாற்றி வரும் பட்சத்தில் அது கூறிய படை ஓய்வூதிய திட்டத்தை தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பல சலுகைகளை தருவதாக கூறி கிட்டத்தட்ட தமிழகம் 53 ஆயிரம் கோடி கடனில் உள்ள நிலையில் மது கடைகளில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் நம்பியே தற்பொழுது ஆளும் கட்சி உள்ளது என்று தெரிவித்தார்.
தற்பொழுது மட்டுமின்றி ஆட்சி புரிந்த 55 ஆண்டுகளில் திமுக டாஸ்மாக் வருமானத்தை நம்பியே உள்ளனர். இதனால் தான் சமூகம் சீர்கெட்டு இளைஞர்கள் பாதை மாறி செல்கின்றனர்.
அதேபோல 2026 இல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தான் கூட்டணி கட்சி அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என உறுதியாக கூறினார். 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தான் 2024 தேர்தல் அமையும் என்றும் தெரிவித்தார்.