சில நாட்களாக ஏன் வெளியில் வரவில்லை என்றும் எப்பொழுதும் துருதுருவென இருக்கக்கூடிய நான் சில நாட்களாகவே காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தன்னுடைய இந்த நிகழ்விற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் நடிகை நஸ்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நஸ்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு :-
சில நாட்களாக நான் ஏன் வெளியே வரவில்லை என்பது குறித்த தகவலை உங்களிடம் பதிவு செய்ய நான் விரும்புகிறேன் என்றும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போல இந்த அற்புதமான சமூகத்தில் நான் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஒரு உறுப்பினராகவே இருந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்கள் ஆகவே தன்னுடைய மனநலம் மற்றும் தனிப்பட்ட சவால்கள் காரணமாக மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளானதாகவும் இது தன்னுடைய வாழ்வை கடினமாக மாற்றிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் தன்னுடைய 30 அவதார் பிறந்தநாள் புத்தாண்டு சூட்சம தர்ஷினி படத்தினுடைய வெற்றி என இன்னும் பல முக்கிய தருணங்களை தன்னால் கொண்டாட முடியவில்லை என்றும் இத்தனை நாட்களாக யாருடைய அழைப்புகளையும் எடுக்காததற்கும் மெசேஜ்களுக்கு பதில் வழங்காததற்கும் தன்னுடைய அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறியிருக்கிறார். தன்னால் தன்னுடைய சக நண்பர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும் கவலைகாகவும் உண்மையில் தான் மிகவும் வருந்துவதாகவும் கூறியதோடு வேலை விஷயமாக தன்னை தொடர்பு கொள்ள முயற்சித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இது போன்ற இடையூறுக்கு மிகவும் வருந்துவதாகவும் கூறியிருக்கிறார்.
தற்பொழுது தன்னுடைய வாழ்வில் இருப்பது ஒரு கடினமான பயணம் என்றும் ஆனால் ஒவ்வொரு நாளும் இதிலிருந்து தான் குணமடைவேன் என கவனமாக செயல்பட்டு வருவதாகவும் கூறியதோடு இது போன்ற ஒரு கடினமான நேரத்தில் உங்களுடைய புரிதலுக்கும் ஆதரவக்கும் மிகுந்த நன்றி என்றும் முழுமையாக திரும்பி வர எனக்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்றும் நஸ்ரியா தெரிவித்து இருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.