நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சித்தார்த்!!! கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பேச்சு!!!

0
113
#image_title

நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சித்தார்த்!!! கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பேச்சு!!!

நடிகர் சித்தார்த் அவர்கள் திரைப்பட புரொமோசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்விற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்தார். அங்கு நேற்று(செப்டம்பர்28) பெங்களூரு சென்ற நடிகர் சித்தார்த் அவர்கள் சித்தா திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

நடிகர் சித்தார்த் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த கன்னட அமைப்பினர் சிலர் காவிரி விவகாரத்தை குறிப்பிட்டு தமிழ் நடிகர்களுக்கும், தமிழ் திரைப்படங்களும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று சத்தம் போட்டனர்.

மேலும் கன்னட அமைப்பினர் அதிகம் பேர் ஒன்றுகூடி ஆரவாரம் செய்தனர். இதனால் நடிகர் சித்தார்த் அவர் புரொமோசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கர்நாடக சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் அவர்கள் இன்று(செப்டம்பர்29) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சித்தார்த் வெளியேற்றப்பட்டத்தற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் சிவராஜ் குமார் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் “சினிமா புரொமோசன் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. அனைத்து விதமான திரைப்படங்களையும் பார்க்கக் கூடியவர்கள் தான் கன்னடர்கள். அவர்கள் அனைவருடைய சார்பில் நடிகர் சித்தார்த் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

Previous articleதிருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!
Next articleமீண்டும் நடிக்க வந்தார்! நடிகை சங்கீதா!!