சிறிய கட்சிகளை ஓரம் கட்டும் அதிமுக! வருத்தத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள்!

Photo of author

By Sakthi

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமை மிகத் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும் பாஜகவிற்கு இருபத்தி மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேமுதிக மற்றும் தாமாக போன்ற கட்சிகளுடன் இதுவரையில் பேச்சுவார்த்தை எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அந்த கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை அதிமுகவின் தலைமை ஈடுபடத் தொடங்கியது. இருந்தாலும் சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தார்கள். இருந்தாலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிறிய கட்சியின் தலைவர்கள் அதிமுகவில் தொகுதிகளை கேட்டதன் காரணமாக, அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்த நடிகர் கார்த்திக் தன்னுடைய மனித உரிமை காக்கும் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் கேட்டதாக தெரிகிறது. அதேபோல புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் ஐந்து தொகுதிகளையும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஐந்து தொகுதிகளையும் ,புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி மூன்று தொகுதிகளையும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மூன்று தொகுதிகளையும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் தனபாலன் ஐந்து தொகுதிகளையும் ,அதே போல அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் சார்பாக ஒன்பது தொகுதிகளையும் ,பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மூன்று தொகுதிகளையும் கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவையெல்லாம் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான அதிமுகவின் தலைமையை சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறுத்திக்கொண்டது என்று சொல்லப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் சிறிய கட்சியின் தலைவர்களை சந்திக்க ஆர்வம் காட்டுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் பேச்சுவார்த்தை குழுவிடம் இருந்தும் சிறிய கட்சிகளுக்கு இதுவரையில் எந்த விதமான அழைப்பும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தொகுதியில் நடிகர் கார்த்திக் அவர்களின் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்று எந்தவிதமான சிறிய கட்சிகளையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் தன்னுடைய கூட்டணிக்குள் வைத்திருந்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆகவேதான் 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் பொழுது அதிமுக கூட்டணி தமிழகத்திலேயே மிகப்பெரிய கூட்டணியாக விளங்கியது .போதாகுறைக்கு அப்போது செல்வாக்குடன் திகழ்ந்த விஜயகாந்தின் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தது இப்பொழுதும் தேமுதிக அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது என்றாலும் போதிய செல்வாக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது விஜயகாந்த் அவர்களின் தேமுதிகவை தவிர்த்து மற்ற சிறிய கட்சிகள் அனைத்தையும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. அதன் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்த சிறிய கட்சிகளும் கூட வெற்றி பெற்றன. அந்த வகையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகி சென்றிருக்கின்ற சரத்குமார் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக் அவர்களின் கட்சியும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது அவருக்கு தொகுதியும் ஒதுக்கித் தந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அவரும் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அந்த நம்பிக்கையில் தான் இப்போதும் நமக்கான முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் அதிமுக கூட்டணிக்கு வர முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை நாடி வரும் சிறிய கட்சிகளை ஓரம் கட்டுவதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பது அனைவரையும் வருந்த செய்து இருக்கிறது.