ஒரு இடத்தில் கூட என்னால் இருக்க முடியாது!! அரியவகை நோய் குறித்து வனிதா ஓபன் டாக்!!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை வனிதா அவர்களுக்கு அரிய வகை நோய் வந்துள்ளதாக அவரே சமூக வலைதள மூலமாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
தற்போது அந்தகன் திரைப்படத்தில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு அரிய வகை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை அவரே தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் அவர்கள் “தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற அறிய வகை நோய்த் தொற்று உள்ளது. இந்த நோய் இருப்பதால் என்னால் அதிக நேரம் சிறிய இடங்களில் அதிக நேரத்தில் இருக்க முடியாது.
லிப்ட், பாத்ரூம் போன்ற இடங்களிலும் கூட அதிக நேரம் இருக்க முடியாது. இந்த அரிய வகை நோய்த் தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த ரசிகர்கள், நெட்டிசன்கள் அனைவரும் வனிதா விஜயகுமார் குணமைடந்து வருவதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.