உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

0
209
#image_title

உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

உப்பளத் தொழிலார்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு முக்கயமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் உப்பளத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற கடல் சார்த்த சில மாவட்டங்களில் உப்பளத் தொழில் நன்றாக நடைபெற்று வருகின்றது. இங்கிருந்து பல இடங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்தியாவின் உப்புத் தேவையை பூர்த்தி செய்யும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது. இதையடுத்து உப்பளத் தொழிலார்களின் நீண்டநாள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று அரசானை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் பல துறைகளுக்கும் நல வாரியங்கள் உள்ளது. இதையடுத்து உப்பளத் தொழிலாளர்களும் உப்பளத் தொழிலுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. தற்போது தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்றுள்ளது.

தமிழக அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட அரசானை வெளியிட்டுள்ளது. இந்த நலவாரியம் மூலமாக மற்ற துறைகளைப் போலவே உப்பளத் தொழிலாளர்களும் அரசின் உதவிகளை பெற்று பயன்பெற முடியும். இந்த நலவாரியம் மூலமாக 50000க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் பயன்பெற முடியும்.