சமீபத்தில் ரப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த காளி வெங்கட் அவர்கள், சென்னையில் நடைபெற்ற அலுங்கு திரைப்படத்தின் பிரமோஷனில் பேசும் தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக கண்கலங்கியபடி சில விஷயங்களை பகிர்ந்தார். அவை பின்வருமாறு,
தன்னுடைய பெரியப்பா வீட்டில் நாய் ஒன்றினை வளர்த்தார்கள். அதற்குப் பெயர் கருப்பன். பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் கருப்பாக இருக்கும் காரணம் இரவில் கூட அந்த நாய் படுத்திருந்தால் யாருக்கும் தெரியாது. எனக்கு அந்த நாய் என்றால் அலாதி பிரியம். எங்களுடைய வீட்டில் நாய் வளர்ப்பதற்கு என்னுடைய அப்பா அனுமதி அளிக்க மாட்டார். எனவே என்னுடைய பெரியப்பா வீட்டில் வளர்த்த நாய் மீது எனக்கு மிகுந்த அன்பு இருந்தது.
திடீரென அந்த நாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டு ஊரில் உள்ள 10, 15 பேரை தாக்கியது. இதனால் கோபமடைந்த ஊர் மக்கள் அந்த நாயினை கொல்ல வேண்டும் என முடிவு செய்தனர். ஆனால் யாராலும் அது முடியவில்லை. அதன் பின்னர் கார்ப்பரேஷனில் சொல்லி பிடித்துப் போக முயற்சித்தனர். கருப்பன் யாரையும் தன் அருகில் வரவிடவில்லை என்று கூறிய அவர், அதன் பின் தன்னை ஊர்மக்கள் அனைவரும் அழைத்ததாகவும் அந்த நாயை கொல்வதற்காக உணவில் எலி மருந்தை கலந்திருப்பதாகவும் அதனை தான் அந்த நாய்க்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறினர் என தெரிவித்திருக்கிறார்.
இது ஊர் மக்களின் முடிவு என்பதால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவர்கள் கூறியதைப் போல இவரும் செய்திருக்கிறார். அந்த உணவினை முழுமையாக உண்டபின் அந்த நாய் இவரை பார்த்தது இன்று வரையில் தன் கண்களை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது என நடிகர் காளி வெங்கட் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
எலி பேஸ்ட் கலந்த உணவை உண்ட பின்பு தண்ணீர் அருந்தினால் உயிர் போகாது என்பதால் ஊர் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வைத்திருந்த தண்ணீரை முழுவதுமாக மூடி வைத்துள்ளனர். ஆனால் அந்த நாயானது ஊரிற்கு வெளியே உள்ள குளத்திற்கு சென்று நீர் அருந்தியதால் உயிர் பிழைத்து விட்டது என்றும் அதனால் தான் தனக்கு தற்பொழுது நிம்மதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதன் பின் தன்னுடைய வீட்டிற்கு சென்ற பொழுது, நடந்தவற்றை கூறியதாகவும் அதற்கு தன்னுடைய வீட்டில், ” ஒரு உயிரினை கொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது “என்று அனைவரும் திட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதேபோலத்தான் இந்த அலுங்கு திரைப்படத்திலும் சில காட்சிகள் மனதிற்கு நெருக்கமாகவும் என்னால் மறக்க முடியாத வகையில் இருக்கிறது என்று பேசியிருக்கும் வீடியோ ஆனது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.