அப்பா சொன்னதால்தான் இதை செய்தேன்!! புன்னகை அரசி சினேகா விளக்கம்!!

Photo of author

By Gayathri

என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். அவரே சொன்னதால்தான் நான் இதை செய்தேன் என்று கூறி இருக்கிறார் நடிகை சினேகா. பல ஆடுகளுக்கு பின் ரகசியத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் பிரசாந்த்திற்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் நடிகை சினேகா. நடிகை கேஆர் விஜயா விற்கு பிறகு பல நடிகைகள் தமிழ் சினிமா உலகில் வந்து சென்றாலும் புன்னகை அரசி என்ற பட்டம் இன்றளவும் சினேகாவிடம் மட்டுமே உள்ளது. மேலும் இவருக்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை சினேகா அவர்கள், என்னவளே, ஆனந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், பம்மல் கே சம்பந்தம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, சின்னா, போஸ், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், வசீகரா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார்.

பிறகு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தின் மூலம் பிரசன்னா உடன் இணைந்து நடித்து. பின்னர் இருவருக்கும் இடையில் காதல் வளர்த்து திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் சில காலங்கள் கழித்து வேலைக்காரன், பட்டாஸ் போன்ற படங்களில் கேமியோ ரோல் போல சில காட்சிகளில் நடித்த சினேகா, அதன் பிறகு தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் உடன் தி கோட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களிலுமே கவர்ச்சி என்பதை தவிர்த்து ஒரு குடும்ப பாங்கான பெண்ணாகவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர் இதற்கு விதிவிலக்காக அப்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார். இது குறித்து பேட்டி ஒன்றில் கூறும் பொழுது, தன்னிடம் புதுப்பேட்டையின் கதையை கூறும் பொழுது எனக்கு அதில் பெரிதளவு விருப்பமில்லை. இக்கதையை நான் கேட்கும்பொழுது என் அருகில் என் அப்பாவும் இருந்தார். இந்த கதையைக் கேட்டவுடன் என் அப்பா என்னிடம் இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகைகளின் பெயர்களை கூறி என்னையும் நடிக்கும்படி சொன்னார். என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர் அவரை இவ்வாறு சொல்லும் பொழுது நானும் இதற்கு ஒத்துக்கொண்டேன் என்று நடிகை சினேகா அவர்கள் கூறியிருக்கிறார்.