சந்திரமுகி படத்தின் போது எனக்கு அது தெரியாது!! தெரிந்திருந்தால் நடித்திருக்க மாட்டேன்.. நயன்தாரா!!

Photo of author

By Gayathri

அப்தமித்ரா என்ற கன்னட மொழி படத்தின் மொழிபெயர்ப்பு படமே சந்திரமுகி ஆகும். 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியானது.

இதுவே நயன்தாரா அவர்களுக்கு தமிழில் முதல் படமாகும். இதனை பி வாசு அவர்கள் இயக்கி இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். மேலும் இதனை, சந்திரமுகி பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் கணேசன் ஆகியோர் சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளனர் , மேலும் இது அந்த நிறுவனத்தின் 50வது படம் என்ற சிறப்பினை பெற்று இருக்கிறது.

சந்திரமுகி திரைப்படமானது, 5 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் , 4 திரைப்பட ரசிகர்கள் சங்க விருதுகள் மற்றும் 2 பிலிம்பேர் விருதுகளை வென்றது மட்டுமின்றி ரசிகர்களுடைய மனதிலும் என்ற அளவும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா அவர்கள் திரைப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே வேகமாக பரவப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் குறித்து நயன்தாரா பேசியிருப்பதாவது :-

நான் இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்-க்கு வரும் பொழுது ரஜினியுடன் தான் நடிக்க வேண்டி இருந்தது. எனக்கு அவரை அப்பொழுது வரை அவர் யார் என்று தெரியாது. நானும் முதல் நாள் ஷூட்டிங்கை நல்லபடியாக நடித்து முடித்து விட்டேன். அதன் பின்பு தான் தமிழ் சினிமா துறையில் இவர் மிக உயர்ந்தவர் என்று தெரியவந்தது.

ஒருவேளை படப்பிடிப்பு தளத்திற்கு வரும் முன்பாகவே இவர் குறித்து எனக்கு தெரிந்திருந்தால் என்னால் கண்டிப்பாக திரைப்படத்தில் நடித்திருக்க முடியாது என்று நடிகை நயன்தாரா அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.