என்ஜிகே திரைப்படத்தின் போது இயக்குனர் செல்வராகவன் என்னை நடத்திய விதம் எனக்கு பிடிக்கவில்லை!! நடிகை சாய் பல்லவி!!

Photo of author

By Gayathri

சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த படம் தான் அமரன். இந்த படம் உலக அளவில் 155 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இது ஒரு உண்மை கதை ஆகும். மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதை என்பதால் ரசிகர்கள் இடையே கண்ணீரையும் மன நெகிழ்வையும் உருவாக்கியது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக சாய் பல்லவி நடித்த படம் தான் என் ஜி கே. இத்திரைப்படத்தில் நடித்த பொழுது தனக்கு ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான என் ஜி கே படத்தின் ஷூட்டிங் இன் பொழுது எனக்கு அருவருப்பான ஒரு மனநிலை இருந்தது. ஏன் என புரியவில்லை. ஆனால் படத்தை விட்டு விலகி விடலாம் என்று எனக்கு தோன்றியது என்று தன்னுடைய மனம் திறக்கிறார் சாய் பல்லவி.

அதற்கான காரணமாக அவர் கூறியது, ஒவ்வொரு காட்சியும் படமாக்கும் பொழுது இயக்குனர்கள் பொதுவாக இந்த காட்சி நன்றாக வந்துள்ளது என்று கூறுவார்கள். ஆனால் செல்வராகவன் அவர்கள் எந்த வித பதிலும் சொல்லாமல் அனுப்பிவிடுவார். இவ்வாறு அவர் செய்வது எனக்கு அந்த இடத்தில் சௌகரியமாக இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி.

இந்த படத்தை விட்டு விலகி விடலாம் என நினைக்கும் சமயத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் என் ஜி கே படப்பிடிப்பு எவ்வாறு செல்கிறது என்று என்னிடம் கேட்டார் என்று அவர் மேலும் கூறுகிறார். அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நிகழ்ந்த நிகழ்வுகளை சாய் பல்லவி கூறியிருக்கிறார். அதற்கு நடிகர் தனுஷ் அவர்கள் என் அண்ணன் எப்பொழுதும் அப்படித்தான். நாம் நன்றாக நடிக்கிறோமா இல்லையா என்பதை அவர் கவனிப்பார்.

நீங்கள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் படத்தில் நன்றாக நடியுங்கள் என்று கூறினார். மேலும் அவருடன் நடிகர் சூர்யாவும் எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தார். அதனால் தான் என்னால் என் ஜி கே படத்தில் நடிக்க முடிந்தது என்று சாய்பல்லவி தெரிவித்திருக்கிறார்.