அவர்கள் நிலையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! டிடிவி தினகரன் நக்கல்!

Photo of author

By Sakthi

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து இருக்கின்ற பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரிசனம் செய்ய சென்று இருந்தார். அவர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தபோது சிறப்பு வழிபாடுகள் நடந்தனர் அதன் பிறகு கோவிலை விட்டு வெளியே வந்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் தமிழக தேர்தல் நடக்கும் சமயத்தில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், மற்றும் தமிழக மக்கள் எல்லோரும் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

விவசாய கடன், மற்றும் கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கையை தேர்தலுக்கான நடவடிக்கைதானா என்பதை மக்களே முடிவு செய்வார்கள். ஜெயலலிதாவின் ஆட்சி கண்டிப்பாக மலரும் என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பேசிய டிடிவி தினகரன் சசிகலா காரில் அதிமுகவின் கொடி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக புகார் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. கட்சியின் கொடியை பற்றி தீர்மானம் செய்வதில் தேர்தல் ஆணையம் தலையிடாது அதிமுக கொடியை சசிகலா பொதுச்செயலாளராக பயன்படுத்துவதை யாராலும் தடுத்துவிட இயலாது . அதற்கு டிஜிபியிடம் இல்லை முப்படைத் தளபதிகள் இடம் புகார் அளித்தால் கூட ஒன்றும் நடக்காது. நீதிமன்றத்தில் முறையிட்டு நடவடிக்கை எடுக்க அவர்கள் முயற்சி செய்யலாம் என்று தெரிவித்தார்.

அமமுக உருவாக்கப்பட்டதற்கு காரணமே ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழ் நாட்டில் கொடுப்பதற்காகத்தான் அதிமுகவின் மீட்டெடுப்பதற்கான ஜனநாயக ஆயுதம்தான் இந்த கட்சி அது நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.