தமிழக சமய அடையாளங்களை மறைப்பதன் மூலமாக முதல்வருக்கும் திமுகவிற்கும் என்ன ஆதாயம் என தெரியவில்லை! கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!

Photo of author

By Sakthi

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவி பாளையத்தில் கோடி சுவாமி குருபூஜையில் பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது.

இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என பாஜக சொல்லுகிறது. குறிப்பிட்ட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று எந்த விதமான நிர்பந்தமும் கிடையாது. தாய்மொழி வழியிலேயே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சம். இப்படியான கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வள்ளலாரின் 200 வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது ஆனால் வள்ளலாரின் சமய அடையாளங்களை மறைத்து படங்கள் வரைந்து உள்ளார்கள் திருநீறு பூசாத அவருடைய படங்களை வைப்பதில் முதல்வருக்கும் திமுக அரசுக்கும் என்ன ஆசை என்று தெரியவில்லை என கூறியிருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.

வடலூரில் பிரசாதமாக கொடுப்பது திருநீறு தான் தமிழக மக்கள் பலரும் திருநீறு வைக்கிறார்கள். திருநீறு தமிழகத்தின் சமய அடையாளமாக திகழ்கிறது. தமிழகத்தின் சமய அடையாளங்களை மறைப்பதன் நோக்கம் தொடர்பாக திமுக அரசு மக்களுக்கு விளக்கம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.