“சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று அழைப்பது எனக்குப் பிடிக்கவில்லை” – நடிகர் சல்மான்கான் பேட்டி!

Photo of author

By Anitha

“சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று அழைப்பது எனக்குப் பிடிக்கவில்லை” – நடிகர் சல்மான்கான் பேட்டி!

Anitha

"I Don't Like Being Called Superstar, Mega Star" - Actor Salman Khan Interview!

தமிழ் சினிமாவில் பொதுவாக நடிகர்களுக்குப் பட்டைப்பெயர் வைத்து அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட சினிமா துறையில்தான் நடிகர்கள் பிரபலமாகும் பட்சத்தில் அவர்களுக்கு அடைமொழி வைத்து அழைக்கும் பழக்கம் பெரும்பாலாக இருந்து வருகிறது.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிகளிலும் இந்த வழக்கம் இருந்து வருகிறது. மக்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்குச் செல்லமாக ஒரு பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நடிகர்கள் மட்டுமில்லாமல், இசையமைப்பாளர்களுக்கும் மக்கள் பெயர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார், உலகநாயகன், சுப்ரீம் ஸ்டார், தல, தளபதி போன்ற பல்வேறு அடைமொழிகள் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றன. இது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்கள் பெயர் பின்னால் இருக்கும் அடைமொழிகளை வைத்து அழைக்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.

நடிகர் அஜித் சமீபத்தில் தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் “தல” என்னும் அடைமொழியை நீக்கி “அஜித் குமார் அல்லது ஏகே” என்று அழைக்க ரசிகர்களிடையே வேண்டுகோள் வைத்திருந்தார். இதனால் இவரின் வேண்டுகோளை ஏற்று அவரின் அடைமொழி நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கமலஹாசனும் தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் “உலக நாயகன்” என்ற பெயரை நீக்க வேண்டுகோள் வைத்திருந்தார். இது அவரின் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் பிரபல நடிகரான சல்மான்கான் கொடுத்த பேட்டியில், “மக்கள் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று நடிகர்களை அழைப்பது எனக்குப் பிடிக்கவில்லை”. என்னை சல்மான் கான் அல்லது பாய் என்று மக்கள் அழைப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும். எதற்கு இந்த தேவையில்லாத அடைமொழி” என்று கூறியுள்ளார்.

இதை ப்ளூ சட்டை மாறன் பார்த்து, “சல்மான்கான் யாரைக் கலாய்க்கிறார்?” என்று அவர் யூ ட்யூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பல மக்கள் அவர்களது கருத்தை கமெண்ட்ஸில் தெரிவித்து வருகின்றனர். “சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். அதைப்போல் தெலுங்குவில் “மெகா ஸ்டார்” என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர்களை நேரடியாகக் கூறவில்லை என்றாலும் அடைமொழி குறித்துதான் சல்மான் கான் கூறியிருக்கிறார் என்று பலர் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.