எனக்கு அதிமுக வேண்டாம்.. என் அண்ணன் தான் வேண்டும்!! விஜய்யுடன் இணையப்போகும் எடப்பாடி மகன்!!

0
643
I don't want AIADMK.. I want my brother!! Edappadi's son to join Vijay!!
I don't want AIADMK.. I want my brother!! Edappadi's son to join Vijay!!

TVK ADMK: அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மகன் தமிழக வெற்றிக் கழகம் விஜய்யுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் திரை பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவையும் நடத்தினார்.அதுமட்டுமின்றி ஓர் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சி கொடி மற்றும் பாட்டை வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து கட்சி கொடி மற்றும் பாட்டு ரீதியாக பல விமர்சனங்கள் வந்த வண்ணமாகத்தான் உள்ளது.இந்நிலையில் மூன்றேழுத்து மந்திரம் என அதிமுக வையும் கைகோர்க்கும் வகையில் பாட்டு உள்ளதாகவும் பலர் அரசியல் வட்டாரத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் குமார் தவெக வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிமுக-வில் கடைக்கோடி தொண்டன் கூட பதிவிக்கு வரலாம் வாரிசு என்ற பேச்சுகே இடமிருக்காது என்று கூறிக்கொண்டு தனது மகனை எந்த இடத்திலும் எடப்பாடி முன்னிறுத்த வில்லை என்ற பேச்சு அதிமுக-வில் பல் நாட்களாக உள்ளது.அதேபோல அவரது மகனும் இனி அதிமுக-வில் இடம் கிடைக்காது என்று எண்ணி தவெக வில் இணைய உள்ளதாக கூறியுள்ளாராம்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி முழுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.மேற்கொண்டு அப்பாவின் பேச்சை எதிர்த்து விஜய்யுடன் கூட்டணி வைக்க மிதுன் குமார் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.