எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ! 

எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்க பல நலத்திட்ட உதவிகளை செய்தது. அதில் ஒன்றுதான் மகளிர்காண இலவச பேருந்து பயண திட்டம். இதில் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பெண்களுக்கு  இத்தனை இலவசங்களை எங்கள் ஆட்சி தான் செய்து வருகிறோம் என்ற வகையில் திமுக மெத்தனம் பேசி வருகிறது. அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில், பெண்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஓசி பஸில் தானே செல்கிறீர்கள் என கேட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

நாம் தமிழர் கட்சி சீமான் இதற்கு கண்டனம் தெரிவித்தார். நாங்கள் கொடுக்கும் காசில்தானே பேருந்தை நடத்துகிறீர்கள். அதில் செல்வது ஓசியா என்றவாறு சீமான் பேசினார். இவ்வாறு இருக்கையில் அரசு பேருந்தில் ஓர் வயதான மூதாட்டி ஏறியுள்ளார். அந்த மூதாட்டியிடம், நடத்துனர் இலவச பேருந்து சீட்டை வழங்கியுள்ளார். ஆனால் அந்த மூதாட்டி அந்த இலவச பேருந்து சீட்டை வாங்கவில்லை. நான் ஒன்றும் ஓசியில் போக மாட்டேன். இந்தா டிக்கெட்டுக்கான காசு, எனக்கு கூறி அந்த நடத்துனரிடம் பணத்தை கொடுத்தார்.

ஆனால் அந்த நடத்துனரோ, அந்த மூதாட்டியிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தார். உங்களுக்கெல்லாம் இலவசம்தான் பாட்டி, பணம் எல்லாம் வேண்டாம் என்று கூறினார். அதற்கு அந்த மூதாட்டி, யார் வேண்டுமானாலும் ஓசியில் போகட்டும் நான் போக மாட்டேன் என்று வம்படியாக கூறி பணத்தை நடத்துனரின் பாக்கெட்டில் போட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் பொன்முடி கூறியதற்கு பாட்டி கொடுத்த பதிலடி என பலர் கமென்ட் செய்தும் வருகின்றனர்.

Leave a Comment