ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்று தமிழ் சினிமாவில் பெயரெடுத்த நடிகர் அர்ஜுன் அவர்கள் தன்னுடைய அனைத்து படங்களிலும் முடிந்த வரையில் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே அனைத்து விதமான சன்ட்டுகளையும் மேற்கொள்ளக்கூடிய திறமை படைத்த நடிகர் ஆவார்.
இவருடைய படங்களில் சண்டை காட்சிகளுக்காகவே பல ரசிகர்கள் கூட்டம் கூடுவதுண்டு.ஆங்கில படங்களை போல தனது படங்களில் சண்டை காட்சிகள் இருக்க வேண்டும் என்று விரும்புவர் அர்ஜூன். அதனால் அவரது படங்களில் சண்டை காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.
தமிழ் சினிமா துறையில் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக பல படங்களில் வெற்றி கண்ட இவர் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் வில்லனாகவும் வெற்றி கண்டு வருகிறார். அந்த வரிசையில் அஜீத்குமாருடன் மங்காத்தா, விஜயுடன் லியோ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் மீண்டும் அஜீத்குமாருடன் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அர்ஜுன் அவர்கள் கூறியிருப்பதாவது :-
ஜெண்டில்மேன் படத்தை நான்தான் டைரக்ட் செய்தேன். அதில் வரும் காமெடி காட்சிகளையும் நானே எழுதினேன். ஷூட்டிங்கில் அவர் பேசும் டைமிங் காமெடி டயலாக் கேட்டு நான் திரும்பி நின்று சிரித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் காமெடி நடிகர் வடிவேலு உடனும் பல படங்களில் நடித்துள்ள அர்ஜுன் அவர்கள், அவருடன் நடிப்பதும் மிக கஷ்டமான விஷயம்தான் என்று தெரிவித்திருக்கிறார். கவுண்டமணியுடன் நடிப்பது போலவே வடிவேலு உடன் நடிக்கும் பொழுதும் தனக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் நடிகர் அர்ஜுன் அவர்கள் இவர்கள் இருவருடனும் நடிப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்று தெரிவித்ததுடன் மட்டுமின்றி இவர்கள் 2 பேருடன் நடிக்க வேண்டிய காட்சிகளில் நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன் என்றும் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.