எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்!

Photo of author

By Hasini

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்!

பெண்களின் முன்னேற்றத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பதை நாமும் பார்த்துக் கொண்டே வருகிறோம்.என்ன தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் ஆண்கள் அவர்களை கிள்ளு கீரையாகவும், அவர்களுக்கு தேவைப்படும் பொழுது உபயோகிக்க பயன்படும் ஒரு பொருளாக மட்டுமே சில பேர் பார்க்கின்றனர்.

சென்னையில் புது வண்ணார பேட்டையை சேர்ந்த புச்சம்மாள் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் (70)  வயதுடைய இவர் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.முதியவரான இவர், 19 வயதான பெண்ணை மிரட்டி உங்கள் குடும்பத்தையே நான் தான் பார்த்துகொள்கிறேன் என்று, பலமுறை அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அதன் காரணமாக அந்த 19 வயது இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.இதை கேள்விப்பட்ட அந்த இளம்பெண்ணின் தாய் அதிர்ச்சியடைந்து, திருவெற்றியூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து பன்னீர் செல்வத்தை விசாரிக்கும் போது, அந்த இளம் பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டான்.எனவே அந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் படி கைது செய்துள்ளனர்.அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது