என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்… லிவிங்ஸ்டன் உருக்கம்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் ஹீரோ, வில்லன், காமெடியன் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இது மட்டுமல்லாமல் சில படங்களில் இவர் திரைக்கதையும் எழுதி உள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் தான் முதல்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தில் வில்லனாக நடித்தார். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இவர் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘வீரா’ படத்திலும் இவர் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
இவர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், தன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், நான் நடிகர் கமலுடன் நட்பாக பழகி வந்தேன். ஆனால், என்னுடைய சில நடவடிக்கையால் அவருடைய நட்பை நான் கெடுத்துக் கொண்டேன்.
தற்போது சினிமாவில் உள்ள நண்பர்களிடம் பேசுவது கிடையாது. சந்திப்பதும் கிடையாது. எங்கையாவது பார்த்தால் பேசுவேன். அவ்வளவுதான். இதனால் பல வாய்ப்புகளை நான் இழந்துவிட்டேன். எனக்கு கமல் சாரிடம் நல்ல நட்பு கிடைத்தது. அவருக்கு என்னை பிடிக்கும். அவர் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் என்னை அழைத்துவிடுவார். அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். ஆனால், என்னுடைய பொறுப்பற்ற நடவடிக்கையால் அவருக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கல. அவர் நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால், நான் தான் முட்டாளாக அவருடைய நட்பை இழந்துவிட்டேன். அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று உருக்கமாக பேசினார்.