பிபின் ராவத் மறைவு! அமைச்சரவை குழு கூட்டத்தில் கண்கலங்கிய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி!

0
152

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விபத்து நடைபெற்ற அன்று மாலையில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்கள் பலரை நான் இழந்து விட்டேன் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், கோபிநாத் முண்டே, உள்ளிட்டோர் நெருக்கமாக இருந்ததுடன் அறிவுரைகளையும் வழங்கினார்கள் அவர்களை நான் இழந்து விட்டேன் தற்சமயம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களை இழந்துவிட்டேன் என்று கூறிய அவர் கண் கலங்கினார். ஒரு நிமிடம் தன்னுடைய பேச்சை நிறுத்தி அழுது விட்டார். அதோடு சக அமைச்சர்களும் கண்கலங்க தொடங்கினார்கள். அதன்பிறகு கண்ணீரைத் துடைத்தபடி பிரதமர் பேச்சை தொடர்ந்தார் பிபின் ராவத் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதோடு முப்படைகளின் தலைமைத் தளபதி உடன் உயிரிழந்த ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரின் உடல்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே உரிய ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Previous articleநிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை!
Next articleபருவமழை பாதிப்பு! 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!