எனக்கும் ரைடுக்கும் சம்பந்தம் இல்லை!! எனக்கும் விஜய்க்கும் அறிமுகமானது இப்படி தான்! அருண் ராஜ் ஓபன் talk!

இப்போ அரசியலில் ரொம்ப காரசாரமா பேசிக்கிற விஷயம் என்னவென்றால் விஜய்யின் TVK கட்சியில் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அருண்ராஜ் சேர்ந்தது தான். அதுமட்டுமல்லாமல் அவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் நேரடியாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அருண்ராஜ் வேற யாரும் இல்ல, இவருதான் விஜய் வீட்டில் 2020 ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது அந்த வருமானவரித்துறை குழுவில் இருந்தவர். அந்த பிரச்சனையில் இருந்து விஜய்யை காப்பாற்றியது என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட உண்மை இல்லையாம். இதை அருண்ராஜ் அண்மையில் பேட்டி ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார். 2014-2015 வருடகாலத்தில் அருண்ராஜ் IRS பணிக்கு சேர்ந்த புதிதில் பிரபலமான நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது தனது நண்பர்களுடன் விஜய்யை சந்திக்க சென்றுள்ளார். போகும்போது சும்மா போய் பாப்போம் இவர் என்ன சாதாரண நடிகர் தானே என்கிற மனப்பான்மையில் தான் அருண்ராஜ் சென்றிருக்கிறார்.

பிறகு விஜய்யை சந்தித்து விட்டு வெளியே வரும்போது அவரின் மிகப் பெரிய ரசிகனாகத்தான் வெளியே வந்தாராம்.அந்த அளவுக்கு விஜய்யுடன் இருந்த அந்த சில மணி நேரங்களில் விஜய்யின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் அருண்ராஜை கவர்ந்துள்ளது. பிறகு அடிக்கடி விஜய்யுடன் போனில் பேசுவது என தனது நட்பை விரிவுபடுத்தியுள்ளார். அண்மையில் தளபதி விஜய் TVK கட்சி ஆரம்பித்தவுடன் நானும் கட்சியில் சேர்ந்து கொள்கிறேன் என விஜய்யுடன் கேட்டுள்ளார். உங்கள் விருப்பம், மக்கள் சேவை செய்ய உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னுடன் வாருங்கள் என விஜய் அன்பாக சொல்ல கட்சியில் தான் சேர்ந்துவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார் அருண்ராஜ்.