குமரேசன் துரைசாமி என்கின்ற நெப்போலியன் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கிராமப்புற திரைப்படமான புது நெல்லு புது நாடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் . இவர் தமிழ் திரையுலகில் நுழையும் பொழுது இவருடைய வயது 27 ஆக இருந்தது.
இவர் சினிமா துறை மட்டுமின்றி அரசியலிலும் சில காலம் இருந்து வந்தார்.திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கையில் பெரம்பலூர் தொகுதியை வளர்த்தெடுத்த நெப்போலியன், 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் . பின்னர் மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு பல திரைப்படங்கள் மற்றும் அரசியலில் பல பரிமாணங்களை கண்ட நெப்போலியன் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய மூத்த மகனான தனுஷ் அவர்களுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பேட்டி ஒன்றில் தான் 43 வருடமாக காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஏன் காபியை விட்டேன் என்பதற்கான காரணத்தையும் அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.
நெப்போலியன் அவர்கள் தன்னுடைய தாயார் மீது அதிக அளவில் அன்பு கொண்டவராக திகழ்ந்து வந்துள்ளார். அவருக்கு 18 வயது இருக்கும் பொழுது அவருடைய தாயார் கேன்சர் வந்து இருந்துள்ளார். தன் தாயாருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நெப்போலியன் அவர்கள், தன் தாயார் இறந்த நாள் முதல் இன்று வரை 43 வருடங்களாக காபியை குடிக்கவில்லை என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னுடைய அம்மாவிற்கு காபி மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் கேன்சர் வந்து இறந்து விட்டதால் என் அம்மாவைப் போன்று நானும் காபியை குடிக்காமல் விட்டு விடலாம் என முடிவெடுத்து இருந்தேன். என் அம்மாவிற்காக இன்று வரை அதை நான் கடைப்பிடித்தும் வருகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதனோடு மட்டுமின்றி, தான் சினிமாவிலும் அரசியலிலும் வளர்ந்ததைக் கண்டு என் தாயார் ரசிக்க முடியவில்லை என்று கூறியும் வருத்தப்பட்டுள்ளார் நடிகர் நெப்போலியன் அவர்கள்.