சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் சிரிப்பை நான் அடக்கிக் கொண்டேன்!! வடிவேலு பகிர்ந்த உண்மை!!

0
2
I held back my laughter at Sivaji Ganesan's funeral procession!! The truth shared by Vadivelu!!
I held back my laughter at Sivaji Ganesan's funeral procession!! The truth shared by Vadivelu!!

இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகராக விளங்குபவர் சிவாஜி கணேசன். தன்னுடைய நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களை தன் பால் இழுத்து வைத்திருப்பதோடு, என்றுமே தன் பெயரை நிலை நாட்டின் சென்று இருக்கிறார். எம்ஜிஆர் திரை உலகில் எவ்வாறு அவருக்கு நிகராகவும் சில நேரங்களில் அவரை விட அதிக அளவில் தன்னுடைய கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே போற்றப்பட்டவர் நடிகர் சிவாஜி. இப்படிப்பட்டவரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்து வடிவேலு வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்தது குறித்து வடிவேலு பகிர்ந்த உண்மை :-

ரஜினி கமல் இளையராஜா என அனைவரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது தங்களுடன் கையில் மது பாட்டிலை ஏந்தி கொண்ட குடிகாரன் ஒருவனும் தொடர்ந்து வந்ததாகவும் அவன் வரும் வகையில் தமிழ் சினிமாவில் இருந்த ஒரே நடிகன். அவனையும் கொன்று விட்டீர்களே என தெரிவித்திருக்கிறார்
.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அங்கு இருந்த ஆனந்தராஜ் அவர்களை பார்த்து நீ தான் வில்லன் நீதான் சிவாஜியை கொன்று விட்டாய் இனிமேல் வரும் காலங்களில் வீசினமாவல் நடித்த அவ்வளவுதான் என எச்சரித்து இருக்கிறார். இதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அந்த இறுதி ஊர்வலம் முழுவதுமாக பின் தொடர்ந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த அனைவரையும் பார்த்து திட்டிய வாரே வந்திருக்கிறார். இளையராஜா அவர்களும் அவன் சரியாகத்தான் சொல்கிறான் நாம் தான் அண்ணனை கொன்று விட்டோம் என தெரிவித்ததாகவும் அங்கு நடந்தவை அனைத்தும் தாங்க முடியாத அளவு சிரிப்பை உருவாக்கியதாகவும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அங்கு பல கேமராக்கள் இருந்ததால் தங்களால் சிரிக்க முடியவில்லை என்றும் சிரித்தால் அந்த சூழ்நிலையில் நன்றாக இருக்காது என்பதால் அனைவரும் தங்களுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு அமைதியாக இறுதி ஊர்வலத்தை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleசீனியருக்கு ஒரு ரூல்ஸ்.. ஜூனியருக்கு ஒரு ரூல்ஸா!! விராட் கோலியின் செயலுக்கு பொங்கி எழுந்த ரசிகர்கள்!!
Next articleசிவாஜி இல்லம் ஜப்தி!.. சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!…