விஜய் டிவியில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இணைந்து தன்னுடைய திறமையின் மூலம் நான்கு வருடங்கள் தொகுப்பாளராக பணியாற்றி அதன்பின் சினிமா துறையில் காலூன்றியவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மெரினா படம் குறித்து கூறியிருப்பது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனைக் குறித்து இந்த பதிவில் காண்போம்.
பிப்ரவரி 3, 2012 ஆண்டு திரையிடப்பட்ட மெரினா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து ஓவியாவும் நடித்திருந்தனர்.தனது கொடுமைக்கார மாமாவிடம் இருந்து தப்பி வரும் அம்பிகாபதி (பக்கோடா பாண்டியன்) இறுதியில் சென்னை மெரினா கடற்கரையை வந்தடைகிறான். அங்கு தனது வயிற்றுப் பிழைப்புக்காகத் தண்ணீர் பைகள் விற்கும் தொழிலை மேற்கொள்கிறான். பின்னர் சுண்டல் விற்கும் தொழிலையும் மேற்கொள்கிறான்.
இவ்வாறு வாழும் அம்பிகாபதிக்கு மெரினா கடற்கரை பல நட்பு வட்டாரங்களை அளிக்கிறது. அம்பிகாபதியின் கனவு படிக்க வேண்டும் என்பதாகும். தனது ஓய்வு நேரங்களில் படிக்கவும் செய்தான். அவனது ஆசை மெரினா கடற்கரையில் உள்ள தனது நண்பர்களுடன் பாடசாலையில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதாகும்.
மெரினா கடற்கரை பல காதல் ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது. அவ்வாறான ஒரு காதல் ஜோடியே செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன்) மற்றும் சொப்பன சுந்தரி (ஓவியா) ஆகியோர் இடம்பெற்று இருப்பர்.
இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இத்திரைப்படம் ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து சரியாக 8 மணி நேரத்திற்கு முன்பு தான் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.