Breaking News

எனக்கு எங்கு எப்படி பேச வேண்டும் என தெரியும்!! பேட்டியில் ஆவேசமடைந்த முன்னணி நடிகர்!!

எனக்கு எங்கு எப்படி பேச வேண்டும் என தெரியும்!! பேட்டியில் ஆவேசமடைந்த முன்னணி நடிகர்!!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தில் முன்னா என்ற கதாபாத்திரத்தில்  நடித்து திரைத்துறைப்  பயணத்தை ஆரம்பித்தார். இதன் பின் ஆயுத எழுத்து, காவியத் தலைவன், அவள், ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடல்களும் பாடியுள்ளார். முதலில் இவர் தெலுங்கு படத்தில் அப்புடோ இப்புடோ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.  சித்தார்த் திரைத்துறையில் நடிகர், பின்னணிப் பாடகர், எழுந்தாளர், தயாரிப்பாளர் போன்ற பணிகளை செய்து வருகிறார்.

இவர் தற்போது கார்த்திக்  ஜி கிரிஷ் இயக்கத்தில் வெளிவந்த டக்கர் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். டக்கர் திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்ததது. தற்போது அந்த  படத்தை பற்றிய விமர்சனங்களும் கிளம்பி வருகிறது. இந்நிலையில் சித்தார்த் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றிருந்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில்  சித்தார்தைப் பார்த்து ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் அரசியல் பற்றி எந்த கருத்துகளையும் தெரிவிப்பதில்லை என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சித்தார்த் எனக்கு தெரியும் நான் எங்கு எப்போது பேச வேண்டும் என்று ஆவேசமாக பதிலளித்தார்.இந்த செய்தி தற்போது  இணையத்தில் பரவி வருகிறது.