”பெண்களின் இடுப்பு 8 போல் வளைவு நெளிவுடன் இருந்ததாம்” – தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சையாக பேசிய பிரபலம்

0
911

தமிழக பெண்களின் இடுப்பு எட்டு போன்று வளைவு நெளிவாக இருந்ததாகவும், வெளிநாட்டு பாலை குடித்ததால் அவர்கள் பேரல் போன்று ஊதி விட்டதாகவும் குதர்க்கமாக பேசி திண்டுக்கல் ஐ.லியோனி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பட்டிமன்ற பேச்சுகளின் போது சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்காக பெண்களையும், பிறரையும் கிண்டல் செய்து பேசும் சுபாவம் கொண்ட ஐ.லியோனி மேசைப்பேச்சுகளில் எதிர்கட்சியினரை ஆபாசமாகவும், தரைக்குறைவாகவும் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏற்கெனவே ஐ.லியோனியின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்பத்தினாலும் அது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், பரபரப்பான இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் சுவாரசியமாகவும், எதிர்கட்சியினரை குற்றம்சாட்டுவதாகவும் நினைத்து பெண்கள் குறித்து இழிவாக பேசி மீண்டும் வசமாக சிக்கியுள்ளார்.

திமுக பேச்சாளர்களில் முக்கியமானவரான ஐ.லியோனி கோவை மாட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வழக்கம் போல் ஆளும் அதிமுகவின் ஆட்சியை  குற்றம்சாட்டிய ஐ.லியோனி திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாதிபதி நாட்டுமாடுகள் மீது அதீத அக்கறை செலுத்தி வருவதாக கூறினார். நாட்டு மாடுகளின் பால் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்ற ஐ.லியோனி வெளிநாட்டு மாட்டுப்பால் குடித்தால் எப்படி உள்ளார்கள் என்பதை ஆக் ஷன் மூலம் செய்து காட்டினார்.

அதாவது அந்த காலத்தில் நாட்டு மாட்டின் பாலை குடித்த பெண்களின் இடுப்பு 8 மாதிரி வளைவு நெளிவுடன் இருந்ததாகவும், பிள்ளைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவர்கள் அப்படியே அமர்ந்திருப்பார்கள் என்றும் கூறினார். ஆனால், இப்பொது வெளிநாட்டு மாட்டை குடிப்பதால் பெண்கள் பேரல் போல் குண்டாகி இருப்பதாகவும், பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்தால் வழுக்கி ஓடுவதாகவும் கேலி கிண்டல் செய்தார். ஐ.லியோனியின் இந்த குதர்க்கமான பேச்சு தொண்டாமுத்தூர் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவில்லையா என்பதே அங்கிருந்தவர்கள் வாய்த்திறவா கேள்வியாக இருந்தது.

Previous articleகொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்!
Next articleசெந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!