நான் ஒன்னு நெனச்சா கடவுள் ஒன்னு நெனைக்கிறாரு!! எனக்கும் லவ்வுக்கும் செட் ஆக மாட்டிக்குது!!  

Photo of author

By CineDesk

நான் ஒன்னு நெனச்சா கடவுள் ஒன்னு நெனைக்கிறாரு!! எனக்கும் லவ்வுக்கும் செட் ஆக மாட்டிக்குது!!

சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.  இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4  இல் பங்கேற்றார்.

சனமின் முதல் படமாக அம்புலி அமைந்தது. பின்னர் இவர் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்தார். மேலும் கே. ராகவேந்திர ராவின் இன்டின்டா அனாமையா  படத்தின் வழியாக தெலுங்கு திரைப்படத் துறைக்கு அறிமுகமாகமானார். ஆனால் இன்டின்டா அனமய்யா சில காரணங்கள் படம் வெளியாகவில்லை. இவருடைய அடுத்த படங்களாக ஜே. ஆர் கண்ணன் எழுதிய தமிழ்ப் படமான மாயை படமும், மலையாளப் படமான அஜித் ரவி பெகாசஸ் என்பவர் இயக்கிய ராவு என்ற மலையாளப்படமும் மற்றும் மம்மூட்டியுடன் ஜோடியாக நடித்த தெய்வதிந்தே ஸ்வந்தம் கிளீட்டஸ் போன்றப் படங்களில் நடித்தார்.

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் அடையாலப்படுத்திக் கொண்டார். மேலும் இவர் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ஆனால் அது எந்த அளவுக்குக்கு உண்மை என்று தெரிய வில்லை. இந்த நிலையில் தற்போது அவர் எப்பொழுதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது சகஜம்தான். இந்த நிலையில் சனம் ஷெட்டி அவர்கள் சமீபத்தில் சோசியல் மீடியா லைவ் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது அவரின் ரசிகர்களில் ஒருவர் சனம் ஷெட்டியின் திருமணம் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நடிகை சனம் ஷெட்டி, தான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன் அது திருமணம் வரை சென்று கடைசியில் சில காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை. நான் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்று நினைக்கிறான் போல, என்று கூறினார். மேலும் எனக்கு திருமணம் செய்து கொள்ள நேரம் இன்னும் வரவில்லை. கடவுள் என்ன எழுதி வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை, என்றும் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். மனமுடைந்து பேசிய சனம் ஷெட்டிக்கு அவரின் ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.