அதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது 23 வது படப்பிடிப்பை முடித்துவிட்டு சுதா கொங்காரா இயக்கத்தில், பராசக்தி திரைப்படத்தை படித்து வருகிறார். இவருடைய 25 வது படம். 24வது படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தை கூறி அதை விட்ட பின்னர் தான் தனக்கு வாழ்க்கையில் தெளிவு கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விஷயம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பகிரப்பட்டு வருகின்றது. அவர் கூறியதாவது, நான் சோசியல் மீடியாவை பார்த்து என்ன முடிவு எடுப்பது என்று குழம்பிப் போயிருந்தேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஒரே விஷயத்தை எடுத்துரைப்பார்கள். அதன் பின்னர் சோசியல் மீடியாவை தேவை இன்றி யூஸ் செய்ய மாட்டேன் என்று முடிவெடுத்தேன். அதன் பின் தான் என் வாழ்க்கையில் எனக்கு தெளிவு கிடைத்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.