நான் ஒரு நாளைக்கு 100 சிகரெட்களை பிடிப்பேன்!! தனது 52 வது பிறந்த நாளில் ரசிகர்களுடன் உண்மையை பகிர்ந்த நடிகர்!!

Photo of author

By Gayathri

நவம்பர் இரண்டாம் தேதி அன்று தன்னுடைய 52 வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடிய ஷாருக்கான் அவர்கள்’ ” நான் என்னுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன்” என்று கூறியிருக்கிறார். புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்ட பிறகு தான் எனக்கு இருந்த மூச்சு திணறல் குறைந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

நான் பல நேரங்களில் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் கூட மறந்து விடுவேன் ஆனால் புகை பிடிக்கும் பழக்கம் மட்டும் மறக்கவில்லை. நான் என் உடல் நிலையை கவனிக்க எந்த அளவிற்கு மறந்தேனோ அதே அளவிற்கு தற்பொழுது கவனிக்க வேண்டி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் அவர்கள் இந்திய சினிமா துறையில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுபவர். இவர் கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 1000 கோடி ரூபாய் ஜூலை பெற்றது.

மேலும் இவர் கடந்த ஆண்டு நடித்த பதான், ஜவான் மற்றும் துன்கி ஆகிய படங்கள் நல்ல வசூலை ஈட்டியது. அந்தவகையில் இந்த மூன்றுப் படங்களும் ரூ 2600 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருக்கு சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.