தினமும் 160 சிகரெட் பிடிப்பேன்!! பிரபல இயக்குனர் பேட்டி!!

Photo of author

By CineDesk

தினமும் 160 சிகரெட் பிடிப்பேன்!! பிரபல இயக்குனர் பேட்டி!!

தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கும் இயக்குனர் வெற்றிமாறன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்புநிலைக்கு மிக அண்மையாக படம் பிடித்து காட்டியதற்காக மிகவும் பாராட்டுப் பெற்றார். இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இத்திரைப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஆங்கில முதுகலை பட்டம் முடிக்கும் தருவாயில் தனது 15 வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. அதனால் அதை வெளிப்படுத துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்து சென்னையிலேயே லயோலா கல்லூரியில் சேரும் போது தான் அதற்கான தருணம் கிடைத்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ச.ராஜநாயகம் இவருக்கு கொடுத்திருக்கிறார். சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார். இவரது இந்த பயணத்திற்கு தொடக்கமாக ச.ராஜநாயகம் இருந்துள்ளார். அவரே வெற்றிமாறனை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டுள்ளார். மேலும் பாலுமகேந்திராவிடம் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்ந்து பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தி உள்ளார். இவர் திரைப்படகலையை பாலுமகேந்திராவிடம் முதன்மையாக கற்றார். வெற்றி மாறனின் மனைவி கல்லூரி காலத்து காதல். இவருக்கும் பூந்தென்றல் என்ற மகலும் உண்டு.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் கொண்டு வந்து வெற்றிமாறன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றாக அவர் 13 வயதிலிருந்தே சிகரெட் பிடிக்க துவங்கிவிட்டாராம். மேலும் பொல்லாதவன் படத்தின்போது ஒரு நாளைக்கு 150 முதல் 160 சிகரெட் வரை பிடித்து இருக்கிறாராம். ஆனால் எப்போது அவர் வாரணம் ஆயிரம் படம் பார்த்தாரோ அதிலிருந்து அவர் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.