ரஜினி மற்றும் கமலுக்கு இடையேயான வித்தியாசத்தை நான் கூறுகிறேன்!! இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

Photo of author

By Gayathri

நடிகர் கமலஹாசன் உடைய விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இப்பொழுது ரஜினியின் உடைய கூலி திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மற்றும் கமல் இருவர் இடையேயும் தமக்கு ஏற்பட்ட நட்பினை ஹாலிவுட் பேட்டி ஒன்றில் விளக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள்.

இப்பேட்டியல் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூறியிருப்பதாவது :-

கமல் சார் மற்றும் ரஜினி சாருடன் பணி புரிவது மிகவும் பெருமையாக இருப்பதாக இவர் கூறியிருக்கிறார். மேலும் இவர் கூறுகையில், நான் தீவிரமான கமல் ரசிகன். கமல் சாரோட ரசிகர் ரஜினி சாரை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என அனைவருக்கும் நான் காட்ட விரும்புகிறேன் என்றும் இவர் கூறியிருக்கிறார்.

ரஜினி சாரோட படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று இவர் கூறியிருக்கிறார்.கடந்த ஒரு ஆண்டாக பேசி, 2 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ரஜினி சார் ஒரு இயக்குநரின் நடிகர். திரையிலும், வெளியிலும் அவருடைய மேஜிக் பெரியது. ஒரு காட்சியை தலைக்குள் ஓட்டிக் கொண்டே இருப்பார். அந்தக் காட்சியில் இதர நடிகர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள் என சிந்திப்பார். அதற்கு நாம் எப்படி எதிரொலிக்க வேண்டும் என யோசிப்பவர் ரஜினி சார்.

ஆனால் கமல் சாரோ, நடிகர் என்பதைத் தாண்டி தான் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று கூறுவார் என்றும் லோகேஷ் கூறியிருக்கிறார்.ஒரு காட்சியை நடிகரிடமும், தொழில்நுட்ப கலைஞரிடமும் விளக்குவதற்கு வித்தியாசம் இருக்கிறது. நடிப்பு என்று வந்துவிட்டால், அதை எப்படி வார்த்தையில் சொல்வது என தெரியவில்லை. இதனை எவ்வாறு விளக்குவது என எனக்கு தெரியவில்லை. இதை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் படப்பிடிப்பு தளத்திற்கு தான் வரவேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.