நடிகர் சூர்யாவை வைத்தே பாகுபலி படத்தினை எடுக்க நினைத்தேன்!! ராஜமௌலி வெளிப்படை!!

Photo of author

By Gayathri

கங்குவா திரைப்படத்தின் பிரமோஷனலுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா மற்றும் அவரது பட குழுவினர் தெலுங்கில் இந்த படத்தினை ப்ரொமோட் செய்வதற்காக சென்றுள்ளனர். அதற்கு சிறப்பு விருந்தினராக ராஜமௌலி வந்துள்ளார்.

வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையிடப்பட உள்ள படம் தான் கங்குவா நடிகர் சூர்யாவினுடைய இந்த படத்தினை ஊர் ஊராக சென்று இப்படக்குழு ப்ரோமோ செய்து வருகிறது.

கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஜமௌலி அவர்கள் பேசும்பொழுது,

நான் வெளிப்படையாக பேச விரும்புகிறேன்.தெலுங்கு சினிமா இன்று இப்படி மாறியதற்கு மிக முக்கியமான இன்ஸ்பிரேஷன் நடிகர் சூர்யாதான். காரணம், கஜினி படத்தின் போது, அந்தப்படத்தை புரோமோட் செய்ய அவர் இங்கே வந்திருந்த விதம், அது மட்டுமல்ல, அந்தப்படத்திற்காக அவர் செய்த இன்ன பிற விஷயங்கள் எங்களுக்கு ஒரு படத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது என்றும் அவர் பேசியிருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், பாகுபலி திரைப்படத்தினை இயக்க சூர்யா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தார் என்றும் கூறியிருக்கிறார். சூர்யா ஏற்கனவே ஒரு நிகழ்ச்சி பாகுபலி படத்தினை நான் தவற விட்டுவிட்டேன் என்று கூறியிருந்தார். அதை சுட்டிக்காட்டி ராஜமௌலி அவர்கள் நான் தான் சூர்யாவுடன் பணியாற்றம் சந்தர்ப்பத்தை தவறவிட்டேன் என்று வருத்தமாக பேசியுள்ளார்.

ராஜமௌலி அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் சூர்யா அவர்கள் மேடையில் வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சூர்யாவை பற்றி இவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் திரையில் தோன்றும் விதம் அவ்வளவு பிடிக்கும். பாகுபலி படத்தில் நான் நடிக்கவில்லை என்று நீங்கள் எடுத்த முடிவை நான் மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இயக்குநர் யார் என்பதை மீறி, கதை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இவருக்கு முன்னதாக பேசிய இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் கூறும் பொழுது, உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ‘நெருப்பு’ என்று பொருள். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும் என்றும் படத்தின் பெயர் காரணத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.