பட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்… : மனம் திறந்த மன்சூர் அலிகான்!
90களில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கேப்டன் விஜயகாந்த்திற்கே டப் கொடுத்து நடித்தார். மன்சூர் அலிகான் தான் அந்தக் காலக்கட்டத்தில் கொடூர வில்லன் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டார். இவரை பார்க்கும் போது பல ரசிகர்களுக்கு பயமாதான் இருக்கும்.
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே நடிப்பால் புகழப்பட்டார். அந்த அளவுக்கு அவர் தன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார்.
ஆனால், தற்போது நடிகர் மன்சூர் அலிகான் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதனைடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். வரும் 19ம் தேதி லியோ படம் திரைக்கு வர உள்ளது.
மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வசனம் எழுதியவர் லியாகத் அலிகானிடம் தான் வாய்ப்பு கேட்டேன். என்னை இப்ராஹிம் ராவுத்தரிடம் அவரிடம் அழைத்து சென்றார். அப்போது அவருக்கு என்னை பிடித்துப்போய்விட்டது.
அதன் பின் லியாகத் அலிகான், ராவுத்தரும் சத்யராஜ் நடித்த ‘வேலை கிடைச்சிடுச்சி’ படம் பார்க்க சென்றபோது, அங்கு நான் ஸ்டண்ட் நடிகராக நடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், நான் எந்த படத்திலும் நடித்தது இல்லை என்று பொய் விட்டேன். இதைப் பார்த்த ராவுத்தர் ‘கேப்டன் பிரபகாரன்’ படத்தில் மன்சூர் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இதை லியாகத் என்னிடம் சொல்ல, நான் சில டம்மி வசனங்களை பேச, அதை வீடியோவாக எடுத்து ராவுத்தரிடம் லியாகத் காட்டியுள்ளார். இந்த படத்தில் வில்லனாக இவரே நடிக்கட்டும் என்று ராவுத்தர் சொல்லிவிட்டார். நான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடிப்பதற்கு முன் குரூப் டேன்சர்களில் ஒருவராக இருந்தேன் என்று பேசினார்.