தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்.. கட்டாயம் 2-வது திருமணம் செய்து கொள்வேன்!! பத்ரி பட நடிகை ஓபன் டாக்!!

0
487
I want a married life.. I will definitely get married for 2nd time!! Badri movie actress open talk!!
I want a married life.. I will definitely get married for 2nd time!! Badri movie actress open talk!!

தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்.. கட்டாயம் 2-வது திருமணம் செய்து கொள்வேன்!! பத்ரி பட நடிகை ஓபன் டாக்!!

திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் பின்னர் திருமணம் செய்துக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இதுவரை பல நடிகர், நடிகைகள் இதுபோல ஒன்றாக நடித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் ஒரு சில வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகின்றனர். அதிலும் சிலர் ஒரு வருடத்திற்குளே விவாகரத்து செய்து விடுகின்றனர். இந்த நிலையில் தான் பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து விவாகரத்து செய்த 42 வயதனா பிரபல நடிகை ஒருவர் தான் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்வது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2000-மாவது ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படம் தான் பத்ரி. இப்படம் அடுத்த வருடமே தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் பிரபல நடிகரான பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்து இருந்தார், அவருக்கு ஜோடியாக நடிகை ரேணு தேசாய் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு இரு மகன் மற்றும் மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். அதன் பிறகு ரேணு தேசாய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் ஆனால் அந்த முயற்சி பாதியிலேயே நின்றது. அதன் பிறகு பல வருடங்களாக ரேணு தேசாய் தனிமையில் தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட நடுவராக பங்கேற்றுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தனது இரண்டாவது திருமணம் பற்றி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய போது இந்தனை வருடம் தன் குழந்தைகளுக்காக அவர் தனியாக இருந்தாகவும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் அவர்கள் வளர்ந்து விடுவார்கள்,அதன் பின் நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன். மற்றவர்களைப் போல தாம்பத்திய வாழ்க்கை வாழ விரும்புகிறேன். இதற்கு என் பிள்ளைகளும் முழு ஆதரவு கொடுக்கின்றனர் என கூறியுள்ளார்.

author avatar
Gayathri