2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பகிர்ந்த எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.
சினிமா துறையில் நுழையும் பொழுது ஹோம்லி லுக்கில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்து தான் சினிமா துறையில் நடிக்கும் நுழைந்ததாகவும், கிளாமராக நடிக்கும் பட்சத்தில் அது தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் பாதிக்கும் என தான் முடிவு செய்து இருந்ததாகவும் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மற்றும் டீசன்டான உடையில் நடிக்க வேண்டும் என முடிவு செய்த நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தெலுங்கில் சமீபகாலமாக கிளாமராக நடித்து வருகிறார். இவர் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சை பேச்சுகள் எழுந்திருக்கின்றன. இவர் ரேஸில் பங்கு கொள்வதோடு துபாய் சென்று அதிக அளவில் பணத்தினை வீணாக்குவதாகவும் பணம் இருக்கும் திமிரால் இவர் இவ்வாறு செய்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் எக்ஸ் தள பதிவில் இதற்கான பதிலை தருவது இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
நடிகை நிவேதா பெத்துராஜின் எக்ஸ் தள பதிவு :-
தான் முதலில் கிளாமராக நடிக்க கூடாது என முடிவெடுத்ததாகவும் ஆனால் சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் இரண்டு படங்களில் கிளாமராக நடித்த கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததோடு தன்னுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இதனை புரிந்து கொண்டதாகவும், சமீப காலமாகவே தன்னுடைய படங்களை தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து பார்ப்பதாகவும் இதுதான் தன்னுடைய ஆசை என்றும் தெரிவித்திருக்கிறார்.