1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுள்ளதிற்கு அறிமுகமானவர் இளையராஜா அவர்கள். அன்று தொடங்கி இன்று வரை இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதில் ராஜாவாக இருந்து வருகிறார்.
தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ படங்களுக்கு பாடல்களை எழுதியவர், ஒரே ஒரு படத்தினை மட்டும் 50 முறை பார்த்ததாகவும் அப்பிடத்தினை தன்னால் மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காண்போம்.
தான் பார்த்து மெய்சிலிர்த்த படம் குறித்து இளையராஜா கூறியிருப்பதாவது :-
1984-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான அமிடியாஸ் என்ற படம் தான். இந்த படம் ஆங்கில இசையமைப்பாளர் மொசாத் வாழ்கை வராலாறு என்பதால் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. அந்த படத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் என்னை ஆச்சிரியப்பட வைத்தது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த படம் வில்லனின் பாளாஷ்பேக் காட்சியில் இருந்து தான் கதை தொடங்கும். இந்த படத்தின் ஒரு காட்சியை ஓப்ரா அரண்மையில் படமாக்கியிருப்பார்கள். இது பீரியட் படம் என்பதால், இப்போது இருக்கும் அரண்மனை செட்டப்பை அப்படியே காட்ட முடியாது. அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த படத்தின் இயக்குனரும் கேமராமேனும், லைட்ஸ் அனைத்தையும் எடுத்துவிட்டு, கேண்டில் ஏற்றி வைத்துள்ளனர்.
ஆனால் கேண்டில் இருந்து புகை வரவே அங்கிருந்த பெயர் அலாரம் அடிக்க தொடங்கிவிட்டது. என்ன செய்வதென்று புரியாமல் இருந்த படக்குழு அதன் பின், கேண்டில்கள் அனைத்தையும் அனைத்து விட்டு அதன் பின் ரிகாசல் பார்த்து முடித்துள்ளனர். சூட்டிங் ஆரம்பிக்கும் தருவாயில் கேண்டில்களை பொருத்தி அதிலிருந்து வரும் புகையின் மூலம் ஃபயர் எல்லாம் அடிப்பதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு காட்சிகளை முடித்துள்ளனர் என்றும் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்திருக்கிறார் இளையராஜா அவர்கள்.
காட்சி முடியும்போது அதில் வில்லனாக நடித்த மொரிரி ஆபிரகாம் ஒரு நொடி எச்சில் முழுங்கிவிட்டு அப்புறம் என்ன நடந்தது என்று கேட்டிருப்பார்.இந்த படத்தை 27-வது முறை பார்க்கும்போ தான் இதை நான் கவனித்தேன். ஒரு ஆள் 2-3 மணி நேரம் பேசிய பிறகுதான் இந்த மாதிரி எச்சில் விழுங்குவார்கள்.
இதை இயக்குனர் சொல்லி கொடுத்திருக்க முடியாது. ஆனால் அந்த கேரக்டரை பற்றி நன்றாக உணர்ந்துகொண்டு அந்த நடிகரே செய்திருப்பார். இவரை பார்த்தால் நேராக சென்று அவரது காலில் விழ வேண்டும் வேறு வழியில்லை என்று இளையராஜா தெரிவித்திருக்கிறார்.